காத்திருந்தேன் உனக்காக



Image hosted by Photobucket.com

காத்திருந்தேன் உனக்காக
காதலுடன் வருவாயென
கால்கடுக்க நின்றிருந்தும்
காணவில்லை உன்னை

உனக்காக ஒரு ரோசா
வைத்திருந்தேன் வாடியது
எழுதிவைத்த கவிதையெல்லாம்
எங்கேயோ ஓடியது

எங்கே போனாயென
ஏங்கி இருந்தபோது
ஏக்கம் தீர்க்கவந்தாய்
என்னிடம் நீ கண்ணே!

வாடிய ரோசாவை
வாசமுடன் நான் நீட்ட
வைத்திருந்த ரோசாவை
வான் நோக்கி நீ எறிய
வானரப்படையாக நான்மாறி
அதை பிடிக்க

வழக்கம்போல் வீசினாயே
வசந்தப் புன்னகையை
அதைப்பிடிக்க என்னால்
இயலவில்லை கண்ணே

நீ பேசுவாயென
நான் மவுனிக்க
நான் பேசுவேனென
நீ மவுனிக்க
இருளும் மவுனமும்
இறுகிக் கொண்டிருந்தது

எனக்காக நீபேச
உதடுபிரிக்க
உனக்காக நான்பேச
உதடுபிரிக்க

எழுந்திருடா
மணியேழு
என்றான்
என் அறைத்தோழன்

11 பின்னூட்டங்கள்:

said...

குழலி குறை நினைக்கவில்லை என்றால். உங்கள் கவிதையில் சின்னஞ்சிறு எழுத்து பிழைகள் உள்ளன தவறாக நினைக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

said...

//குழலி குறை நினைக்கவில்லை என்றால்.//

என்னங்க இது, பின்னூட்டப்பெட்டியே அதற்கு தானே, என்ன குறையை வேண்டுமென்றாலும் சுட்டிக்காட்டலாம், சூப்பர் தல சூப்பர் (முகமூடி கோவிக்க மாட்டார்) அப்படினு எழுதறதுக்கா?, முடிந்த அளவு எழுத்துப்பிழையை திருத்தியுள்ளேன், தட்டச்சுபிழை மட்டுமல்ல சில இடங்களில் குழப்பமும் வருகின்றது எனக்கு, மேலும் மவுனம் என்பதை ஈ-கலப்பையில் எப்படி சரியாக தட்டச்சு செய்வது என தெரியவில்லை, தெரிந்தால் சொல்லுங்களேன் யாராவது

said...

மௌனம் - maunam
்ம்ம்ம்ம்ம்ம்ம் மவுனம் - mavunam

said...

நன்றி அன்பு, நீண்ட நாள் குழப்பம் தீர்ந்தது

said...

தருமிக்கு ஒரு சந்தேகம்...நக்கீரனாக மாறலாமா என்றுதான். என்ன சொல்ல வருகிறீர் என்பதைத் தெளிவு படுத்தலாமா? எல்லாமே கனவுதான் என்ற 'மாயா தத்துவமா'? இல்லை இன்னும் ஏதாவது இருக்கா?

said...

//வைத்திருந்த ரோசாவை
வான் நோக்கி நீ எறிய
வானரப்படையாக நான்மாறி
அதை பிடிக்க...//


பாய்ஞ்சு பிடிக்க நெனச்ச,
(ரோசாவ... ரோசாவ பிடிக்க நெனச்சத சொல்றேன்!)
இந்த எடத்துலயே, நீர் கட்டில்-ல இருந்து தொபுக்கடீர்னு உழுந்து தூக்கம் கலஞ்சிருக்குமே! அப்புறம் எப்டிய்யா மீதி வரியும் வந்துச்சு?. எல்லாம் சுட்டதுதானே!!!

சரி உடுய்யா,

கயிதக்கி
பொய்
அயகு!! ;-)

said...

//எல்லாமே கனவுதான் என்ற 'மாயா தத்துவமா'? இல்லை இன்னும் ஏதாவது இருக்கா?
//

அதெல்லாம் ஒண்ணுமில்ல ஐயா, எப்படி முடிப்பது என தெரியவில்லை, அதனால் தான் அப்படி முடித்தேன்...

//இந்த எடத்துலயே, நீர் கட்டில்-ல இருந்து தொபுக்கடீர்னு உழுந்து தூக்கம் கலஞ்சிருக்குமே! அப்புறம் எப்டிய்யா மீதி வரியும் வந்துச்சு?. எல்லாம் சுட்டதுதானே!!!
//

ஞானபீடம் அண்ணாச்சி இது எழுதப்பட்ட ஆண்டு 1989, ஆனால்

//நீ பேசுவாயென
நான் மவுனிக்க
நான் பேசுவேனென
நீ மவுனிக்க
இருளும் மவுனமும்
இறுகிக் கொண்டிருந்தது

எனக்காக நீபேச
உதடுபிரிக்க
உனக்காக நான்பேச
உதடுபிரிக்க
//
அந்த வரிகள் ஏதோ ஒரு திரைப்படத்தில் கிட்டத்தட்ட இதே வார்த்தைகளுடன் இதே அர்த்தத்தில் வந்துவிட்டன.'இதயவாசல்' என நினைக்கின்றேன் அந்த படம்

said...

கவிதை நல்லா இருக்கு, 1989லியே யாருக்காவோ காத்திருந்திங்க போலிருக்கே

said...

//கவிதை நல்லா இருக்கு,//
நன்றி
// 1989லியே யாருக்காவோ காத்திருந்திங்க போலிருக்கே//

தலைவா பிரச்சினை செய்றிங்களே நியாயமா?!

said...

for whom க்கு கல்யாணம் ஆகி ரெண்டு குழந்தைங்க இருக்கு... இதுக்கு அடுத்த கவிதையான "வாழ்வே மாயம், உலகே மாயம்" என்ற கவிதை எப்போ ரிலீஸ் குழலி...

ஜூனியர் விகடன் டயலாக் :

அப்பாவி 1: ஞானபீடம் "கயிதக்கி பொய் அயகு " அப்படீன்னு குழலிய ஸிம்பாலிக்கா கழுதன்னு சொல்றாரோ...
அப்பாவி 2: குழலிய கழுதன்னு சொல்ற ஞானபீடத்த குழலி பன்னின்னோ இல்ல வேற எதாவதாவோ சொல்ல போறதில்லையாமா
அப்பாவி 3: இணையத்துல ஒரு நாரதர் இருக்கறது பத்தாதா, நீங்க வேற...
அப்பாவி 4: நீங்க இணைய நாரதர்னு ஞானபீடத்தையா சொல்றீங்க....
முகமூடி : என்னைய்யா இது, ஒன்னுமே புரியல... ஏதாவது புரியிர மாதிரி பேசுங்கப்பா...

said...

நாராயண...
நாராயண...
நாராயண...